திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை பஞ்சாயத்திற்குட்பட்ட கொத்தன்குளம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை தினம் தினம் மோசமாகின்றது. அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான குடிநீர் கிடைப்பதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முறையான குடிநீர் விநியோகம் இதுவரை நடைபெறாததால், கிராம மக்கள் வெளியிடங்களிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கும் கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மூதாட்டிகள், பெண்கள், மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்லும் இளைஞர்களும் நீர் தேடி நேரத்தை செலவிடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தன்குளம் கிராமத்திற்கு போதுமான குடிநீர் வழங்கவும், நீர் மேலாண்மை திட்டங்களை உடனடியாக செயல்படுத்தவும் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என எங்கள் கிராம மக்கள் கோருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக