கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி

 

IMG-20250222-WA0002

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி 


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 


இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டு வரப்பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம், அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயா் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளா்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad