மாநில எல்லை சோதனைச் சாவடியில், சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்!
பேர்ணாம்பட்டு,பிப் 14 -
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் நிலையில், பேர்ணாம் பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியான பத்தரபள்ளி சோதனைச் சாவடியில், நேற்று 13.02.2025-ம் தேதி, குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் எண். 1196 .தமிழழகன் மற்றும் மேல்பாடி காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் எண்.1351 ரேகா ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமானவாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், எதிரி அப்பு அருண்குமார் (வயது 30), த/பெ.ஸ்ரீராமுலு, கள்ளிச்சேரி, பேர்ணாம் பட்டு என்பவர், சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 520 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்தமைக்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் இன்று 14.02.2025-ம் தேதி நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிபாராட்டினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக