கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் செல்வன், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார், குருசாமி, மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டவணிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதன்படி (1)தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் ரவுடிகளால்தாக்கப்படுவதும் மாமூல் தர மறுக்கும் வணிகர்கள் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுவதும் தமிழகம் முழுவதும் தொடர் சம்பவங்களாக நடந்து வருகிறது இதை கண்டிக்கும் வகையில் வணிகர்களுக்கு வணிகர் நல பாதுகாப்பு சட்டம் இயற்றிடவேண்டி. நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு வணிகர் நல பாதுகாப்பு மாநாடு என பெயர் சூட்டி வணிகர் நல பாதுகாப்பு சட்டம் இயற்றிடவேண்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மாநாடாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
(2)அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களையும் மாநாட்டிற்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
(3)மற்றும் மாநாட்டிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் இருநூறு வண்டிகளில் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது மற்றும் கோவை மாவட்டம் திருப்பூர் பொள்ளாச்சி பழநி கிருஷ்ணகிரி திண்டுக்கல் திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் விருதுநகர் மற்றும் சாத்தூர் திருநெல்வேலி வள்ளியூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது, முடிவில் செல்வின் நன்றியுரை ஆற்றினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக