குடியாத்தம் , பிப் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு மற்றும் வருவாய்த் துறை மூலமாக வழங்கப் படும் வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, இறப்புச்சான்று, பட்டா ஆகியவற்றை பெற சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக் கணக்கானவர்கள் தினமும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த சான்றுகளைப் பெற இ-சேவை மையங்களில் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். அதன் மீது வருவாய் துறை யினர் ஆய்வு செய்து ஆன்லைன் வழி யாகவே சான்று வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் சமீபகாலமாக புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவர்கள் இ-சேவை மைய வளாகத்தின் அருகே அமர்ந்து, சான்று பதிவு செய்ய வரும் மக்களிடம் உடனடியாக பெற்று தரு வதாக கூறி அதிக அளவில் கட்டணம் வசூல் செய்கின்றனர்.உடனடியாக சான்று கிடைத்தால் போதும் என நினைத்து பொதுமக்களும் புரோக்கர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர்.
புரோக்கர்கள் சான்றுகளை உடனடியாக பெற்று தராமல் காலம் தாழ்த்துவதால் சான்றுக்கு பணம் கொடுத்தவர்கள் வேறு வழியின்றி புதிதாக இ-சேவை மையத்தில் பதிவு செய்கின்றனர்.இதில் சில புரோக்கர்கள் ஆதாரில் முகவரி மாற்றம் செய்வது ஈடுபட்டு வருகின்றனர்
எனவே, தாலுகா அலுவலக வளா கத்தில் விண்ணப்பம் எழுதும் போர் வையில் உள்ள புரோக்கர்களை அகற்ற
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது இன்று காலை வட்டாட்சியர் அவர்கள் அலுவலகம் வளாகத்தில் மனு எழுதுபவர்களை அதிரடியாக வெளியேற்றினார்கள்
இருப்பினும் அவர்களின் நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக