வேலூர் , பிப் 5 -
வேலூர் மாவட்டம் சாலை விபத்தில் கட்டிடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 30) மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்த கோகுல்நாத்தை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக