இராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் கருத்துகளையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம், தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பயிர் காப்பீடு ஊரணி தூர்வார்கள் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குதல் கண்மாய்கள் தூர்வார்கள். தடுப்பணை கட்டுதல் பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டியும் சாலைகள் சீரமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். விவசாய பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகளுக்கு துறை ரீதியாக அலுவலர்கள் பதில் அளித்தனர். மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் காலதாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்ததையொட்டி தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக தேவையான அளவிற்கு பணியளர்களை நியமித்து விவசாயிகளிடம் முழுமையாக நெற் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படுமென என மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்தார். தொடர்ந்து காற்று பன்றிகள் மற்றும் காட்டு மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுத்திடும் வகையில் வனத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுந்தினார். தொடர்ந்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் விவசாயிகள் உற்பத்தி பொருட்களை இருப்பு வைத்து உரிய நிலைக்கு விற்பனை செய்து கொடுக்க வேளாண் துறை அலுவலர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டுமென அறிவுறுத்தியதுடன் விவசாயிகளின் தேவைக்கேற்ப இடுபொருள்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான இட வசதிகள் அமைத்திடவும் வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். மேலும் ஆர்.எஸ் மங்கல வட்டாரத்தில் பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏற்ப பழுதடைந்த கால்வாய்களை பொதுப்பணி துறையின் மூலம் சீரமைத்து தர விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணக பொதுப்பணித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.மேலும் விவசாயிகளின் கோரிக்கையை மனுக்களுக்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உரிய பதில் வழங்கிடவும் அவர்களுக்கு அறிவுறுத்தியதுடன் விவசாயிகள் பருவ காலங்களில் உரிய வேளாண் பணிகளை அரசு மேல் கொள்ள பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் அறிவுறுத்தினார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜுலு மாவட்ட வன அலுவலர் ஹேமலதா வேளாண்துறை இணை இயக்குனர் மோகன்ராஜ்,மத்திய கூட்டுறவு வங்கி வேளாண் இயக்குனர் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியரை நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக