கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவிற்கு காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறை நண்பர்கள் மின்வாரிய ஊழியர் ஹரி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு இந் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டார்கள் இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில் மதிய உணவு சங்கராபுரம் ஒன்றிய அலுவலகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக