ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுக் கூட்டத்தில் பெரியார் பற்றி தொடர்ந்து அவர் பேசி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று(பிப். 1) மாலை பிரச்சாரம் செய்ய ஏதுவாக திருநகர்காலனி பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் மரப்பாலம் முன்சிபல்முனிசிபல் சத்திரம் பகுதியில் தெருமுனை கூட்டம் என 2 இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதி வேண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.அளித்தனர். இதனைத் தொடர்ந்து மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் மட்டும் தெருமுனை கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தெருமுனை கூட்டத்திற்கு மேடை அமைக்க நாம் தமிழர் கட்சியினர் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் கோபமடைந்து தேர்தல் பறக்கும் படை வாகனத்தை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது தொடர்ந்து காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாம் தமிழர் கட்சியினரை போலீசார் சமாதானம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக