திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், (பொறுப்பு) முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், 21.02.2025 ம் தேதி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வெ.கீதா தலைமையில், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் சுதீர்லால், அமைச்சு பணியாளர்கள் ஒன்றிணைந்து,
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒழிக்க எந்நாளும் உழைத்திடுவோம்.
அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத்தமிழ்மொழி நாளான இன்று உளமாற கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக