மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

IMG-20250202-WA0003


ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள மேற்கு புதூரை சேர்ந்தவர் முருகேசன் (72). இவரது மனைவி முத்துராணி (58). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். முருகேசன் நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.


இந்த நிலையில, கடந்த 17-ம் தேதி, வேப்பந்தலை பறிக்க முருகேசன், வீட்டில் உள்ள வேப்பமரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு முதுகு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் குமார், பவானி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad