ஊர்க்காவல் படைவீரர்களுக்கு கெளவுரவிக்கும் விழா:
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாவட்ட எஸ்பி நிஷா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணி புரிந்து சமூக பாதுகாப்பிற்கு பெரும் பங்காற்றிய ஓய்வு பெற்ற ஊர்க்காவல் படை காவலர் மற்றும் அதிகாரிகளை கவுரவிக்கும் விழா நடந்தது. மாவட்ட எஸ்பி நிஷா தலைமை வகித்து 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் ஊர்க் காவல் படை வீரர்களுக்கு நற்சான்றிதழ்களை எஸ்பி வழங்கினார்
காவல் பல்பொருள் அங்காடியில் சலுகை விலையில் பொருட்கள் பெறும் வகையில் பல்பொருள் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சீரமைத்தல் முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது காவல் துறையினருக்கு உதவியாக பாதுகாப்பணியில் ஈடுபடு தல் உள்ளிட்ட பல்வேறு காலங்களிலும் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என மாவட்ட எஸ்பி தெரிவித்தார்ககள் மேலும், இந்த விழாவில் நீலகிரி மாவட்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையகம், சைபர் கிரைம் மற்றும் ஊர்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி கள் கலந்து கொண்டர்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக