நீலகிரி - உதகையில் பாஜாக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

நீலகிரி - உதகையில் பாஜாக ஆர்ப்பாட்டம்.

 

IMG-20250205-WA0003

நீலகிரி - உதகையில் பாஜாக ஆர்ப்பாட்டம். 


நீலகிரி மாவட்டம் உதகையில் திருப்பரங்குன்றம் கோயிலில் அசுத்தம் செய்பவர்களை கண்டித்து நீலகிரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நீலகிரி மாவட்ட தலைவர் தருமன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் கோர்ட் தலையிட்டு ஆர்பாட்டம் நடத்த மதியம் அனுமதி வழங்கியதால் மாலை  அனைவரும் விடுவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கோவில் அறுபடை வீடுகளில் முதல் வீடாகும். தொன்றுதொட்டு முருகனின் திருத்தலமாக விளங்கும் கோவில் மலையை மாசாக்கும் விதமாக, அபகரிக்கும் விதமாக சில அந்நிய சக்திகள் மதத்தின் பெயரில் அட்டூழியம் செய்துகொண்டிருந்தது அங்கே மாமிசம் உண்டு இந்து மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்திய MP நவாஸ்கனியை  ஏதும் செய்யாமல் விட்டுவைத்து இந்துக்களுக்கு துரோகம் இழைப்பதாக  தமிழக அரசை கண்டித்து தமிழகம் எங்கும் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், உதகை நகரில் மாவட்ட தலைவர்  Dr.தருமன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தில்  பாஜாக தொண்டர்கள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad