குடியாத்தம், பிப் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை வேலூர் மாவட்டம் குடியாத்தம் மையப் பகுதியான புதிய பேருந்து நிலையம் அரசு மருத்து வமனை தெரு அண்ணா தெரு ஜிபிஎம் தெரு, கொசவண்ணாமலை தெரு ஆகிய பகுதிகளில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது .
இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இன்று ஆக்கிரமிப்புகள் அப்புறப் படுத்தப்பட்டது இதில் முதற்கட்டமாக அரசு மருத்துவமனை தெருவில் உள்ள வணிக வளாகங்களில் மேல் உள்ள விளம்பர பலகைகள். கூரைகள் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு இவைகளை நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது
இதில் நகராட்சி நிர்வாகம் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக வியாபாரிகள் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் ஆக்கிரமைபை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஆணையாளர் மங்கையரசன் கோட்டாட்சியர் செல்வி சுப்புலட்சுமி வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகர அமைப்பு அலுவலக சீனிவாசன் பாதுகாப்பு பணியில் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார்
மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக