தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி! )
வேலூர் ,பிப் 9 -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி) இன்று வேலூர் பில்டர்பெட் ரோட்டில் அமைந்துள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று பிப்ரவரி 9 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இந்த சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் சகோ முஹம்மது ஒலி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு குர்ஆன் அடிப்படையில் பதில் அளித்தார்.
நிகழ்ச்சியின் முன்னிலை வகித்தவர்கள் மாவட்டத் தலைவர் சகோதரர் அப்துல் அஜீஸ், மற்றும் கிளைத் தலைவர் முஹம்மது பைசல், கிளைச் செயலாளர் சமீல் அஹமத், கிளை பொருளாளர் முகமது பாசில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வழங்கப்பட்டது .
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக