தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
இராமநாதபுரம் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசு கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்தினர் இதில் புதிய பென்சில் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் 21 மாத நிலுவத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர் எம் ஆர் பி செவிலியர் விடுதி தூய்மை பணியாளர் உள்ளிட்ட சிறப்பு கால முறை தொகுப்பூதிய மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமு ரை ஊதியம் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும் எனவும் பணிசாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நின்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் எனவும் கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வந்ததை தமிழக அரசு 5 சதவீதமாக குறைத்திருப்பதை கைவிட்டு மீண்டும் 25 சதவீதம் பணி வாய்ப்பு வழங்கவும், அரசு ஊழியர்களின் பணி பணிப்பளுதினை குறைக்க வேண்டும் அலுவலக பணிநேர நேரத்திற்கு பின்பும் விடுமுறை தினங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலமாகவே சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் யுனைட்டேட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவத்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட துறைகளில் தனியார் கம்பெனிகள் மூலம் புற ஆதார முகமை மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் காலம் முறை ஊதிய நடைமுறையில் நிரந்தரமாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் தலைமையிலும் முன்னிலையாக துணைத்தலைவர்கள் பவுல்ராஜ் சரவணன், வேலுச்சாமி இணைச் செயலாளர்கள் வினோத்குமார், ரோஸநாரா பேகம், முத்துச்சாமி,சரத்
மோகன் மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டர்
மேலும் வரும் பிப்ரவரி 25 ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் மார்ச் 19 ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக