தியாகதுருகத்தில் கம்பன் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் ஸ்ரீ லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகதுருகம் கவி கம்பன் கழகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கம்பன் விழா நடைபெற்றது கல்லூரி முதல்வர் வே.பழனியம்மாள் தலைமை வைத்தார் தியாகதுருகம் கவி கம்பன் கழகத் தலைவர் மு. பெ. நல்லாப்பிள்ளை முன்னிலையில் வைத்தார் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நடைபெற்றது பல்வேறு போட்டிகளில் பங்குபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கம்பன் கழகத் தலைவர் எஸ்.எம்.சுலைமான் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார் குடி குடியை கெடுக்கும் எனும் விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது நிகழ்ச்சியை கவி கம்பன் கழக நிறுவனர் இரா.துரைமுருகன் தொகுத்து வழங்கினார் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் நா. பெரியசாமி நன்றி கூறினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக