நீலகிரி - ஹட்டியில் தொட்டஹப்ப எனும் ஒற்றுமை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 பிப்ரவரி, 2025

நீலகிரி - ஹட்டியில் தொட்டஹப்ப எனும் ஒற்றுமை திருவிழா.

IMG-20250205-WA0009

 நீலகிரி -  ஹட்டியில் தொட்டஹப்ப எனும் ஒற்றுமை திருவிழா.


நீலகிரி மாவட்டத்தில் படுகர்கள் தொன்றுதொட்டு தை மாதத்தில் கால்நடைகளுடன் ஒன்றி வாழ்ந்ததில் பசு கன்றுக்கு காணிக்கை செலுத்தும் திருவிழா தொட்டஹப்ப நடைபெற்றது. கன்னேரிமுக்கு ஹட்டியில் தொட்டமனெ என்னும் வீட்டில் ஊர்மக்கள் தங்களது வீடுகளில் சமைத்த உணவை எடுத்துவந்து மூன்று பெரிய தட்டில் வைத்து பூஜைசெய்து பசு கன்றுக்கு மாலையிட்டு வணங்கி வழிபட்டு படையலை கன்றுக்கு வழங்கி அந்த பிரசாதத்தை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இதன் பொருள் ஹட்டியில் மனஸ்தாபம் மற்றும் ஒற்றுமையின்றி ஓர்ஆண்டு முழுவதும் இருந்த மக்கள் தங்கள் தவரை இருவரும் ஒப்புக்கொண்டு அனைவரும் சமம் இன்றுடன் பகையை மறைந்து ஒன்றுகூடியதாக அர்த்தம் ஆகும். மீதேனு ஹட்டியில் பாரம்பரிய கில்லிவிளையாடி மகிழ்ந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad