தைப்பூச திருவிழா சிறப்பாக தொரப்பாடி கிராமத்தில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் அழகு குத்தியும் காவடி ஏந்தியும் செக்கிழுத்தும் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையில் வடை எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர் இவ்விழாவில் செங்கம் வட்டாட்சியர் முருகன் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு தொரப்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் செங்கம் டவுன் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருவண்ணாமலை செய்தியாளர் எஸ் .ராமராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக