மானாமதுரை பெரியகோட்டை விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக எடுத்து சென்ற மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் பெரியகோட்டை விளக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக நாகேந்திரன் (68) என்பவர் சட்டத்திற்கு புறம்பாகவும், தனது சுய லாபத்திற்காகவும் சுமார் 27 பிராந்தி மது பாட்டில்களை சாக்குப் பையில் வைத்து கொண்டு செல்வதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணைக்காக மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நாகேந்திரன் மீது காவல்துறையினர் தமிழ்நாடு தடை சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக