தோட்ட க்கலைத் துறை மற்றும் அடேசியஸ் ட்ரீம் பவுண்டேஷன் சார்பில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் இணைந்து வேளாண் திட்டத்தின் கீழ் பழச்செடிகளை வழங்கும் நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

தோட்ட க்கலைத் துறை மற்றும் அடேசியஸ் ட்ரீம் பவுண்டேஷன் சார்பில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் இணைந்து வேளாண் திட்டத்தின் கீழ் பழச்செடிகளை வழங்கும் நிகழ்ச்சி!


குடியாத்தம், பிப் 20 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலாளத்தூர் கிராமத்தில் தோட்ட க்கலைத்துறை மற்றும் அடேசியஸ் ட்ரீம் பவுண்டேஷன் சார்பில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் இணைந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  திட்டத்தின் கீழ் பழச்செடிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சுஜாதா தலைமை வகித்தார் உதவி தோட்டக்கலைஅலுவலர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு மா கொய்யா சீதாப்பழம் சப்போட்டா, நெல்லி ஆகிய செடிகள் அடங்கிய தொகுப்பினை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் நந்தினி சா. பூவிதா,  நிவாசினி,  நிவேதா,  பவித்ரா பூவிதா பிரசன்னா தேவி ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad