திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்....... விவசாயிகள் குறைதீர் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்....... விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்....... விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடந்தது.
     
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செந்தூர்  கோட்டாட்சியர்  சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் திருச்செந்தூர், சாத்தான்குளம் ,ஏரல் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட விவசாயிகள் , வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருமேணி ஆறு பாசனத்தில் சுப்பராயபுரம் அணைக்கட்டில் உயரமான ஷட்டர் அமைத்திருப்பதாக விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், குற்றச்சாட்டுகளை தெரிவித்தும் விவசாயிகள் பேசினர்.

மேலும் வருகை பதிவேடு என கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்பு அதில் தீர்மானங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் நிறைவேற்றுவதாக புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம்  மற்றும் கிராம அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad