தூத்துக்குடி - சிற்றுந்து(மினிபஸ்) உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி - சிற்றுந்து(மினிபஸ்) உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் சிற்றுந்து(மினிபஸ்) உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்.

தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி சிற்றுந்துகளுக்கான புதிய விரிவான திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விரிவான திட்டம் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

இந்த திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் மொத்த நீளம் 25 கீ.மீ. ஆகும். அதில், போக்குவரத்து சேவை செய்யப்படாத தடத்தின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள சிற்றுந்து உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 56 புதிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய விரிவான திட்டத்தில் சிற்றுந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

56 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்து அனுமதிச் சீட்டிற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான கடைசி தேதி வருகின்ற மார்ச் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad