மதுரை கூடல்நகரில் ரயில் விபத்து தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நடத்திய தத்துரூபமான ஒத்திகை பயிற்சி - வியந்துபார்த்த பொதுமக்கள் மேம்பாலத்தில் வேடிக்கை பார்க்க நின்றதால் போக்குவரத்து நெரிசல்.
மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது போலவும் அதிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக மீட்பது அவசர சிகிச்சை அளிப்பது அதிகாரிகள் நேரில் ஆய்வு மோப்பநாய் உதவியுடன் சோதனை ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகள் ஒன்றுடன் ஒன்று மோதிய ரயில் பெட்டிகளை அகற்றுவது ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்ட பயணிகளை பத்திரமாக மீட்பது போன்ற தத்ரூபமாக ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் விபத்து ஏற்பட்டு இரண்டு பெட்டிகள் ஒரு பெட்டி கவிழ்ந்தும் ஒரு பெட்டி இன்னொரு பெட்டியின் மீது நிற்பது போன்ற நிலையில் எவ்வாறு பயணிகளை மீட்பது குறித்தான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மருத்துவ குழுவினர் ரெட் கிராஸ் அமைப்பினர் தீயணைப்பு படையினர் மாவட்ட பேரிடர் மீட்புத்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, கோட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளும் ரயில் விபத்து குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதும் விபத்து மீட்பு பணிகளை மேற்கொள்வதும் குறித்தாக தத்ரூபமாக நடைபெற்றது. மேலும் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விபத்துக்கான காரணம் குறித்து ரயில் நிலையங்களில் ஆய்வு செய்வதும் ரயில்வே தண்டவாளத்தில் முழுவதிலும் வெடிகுண்டு பொருட்கள ஏதும் இருக்கிறதா என்பது குறித்தான மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது
20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போலவும் விபத்து நடைபெறும் இடத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகள் கழிப்பறை உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தற்காலிக அறை அமைப்பது என பயிற்சி ஒத்திகை நடைபெற்றது
இதில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து அவர்களை ஸ்ட்ரக்சர் மூலமாக தூக்கிச் சென்று அவர்களுக்கு அவசர அவசரமாக உதவி அளிப்பது விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் இருந்து தேசிய மீட்பு படையினர் கயிறுகள் மூலமாகவும் ஏணிகளை பயன்படுத்தியும் அவசர வழியில் பயணிகளை மீட்பது உள்ளிட்ட பயிற்சி ஒத்திகையும் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி ஒத்திகையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் கூடல் நகர் பகுதி வழியாக செல்லக்கூடிய பாத்திமா கல்லூரி மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் நிஜத்தில் விபத்து நடந்து விட்டதாக கூறி வேடிக்கை பார்த்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக