அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிவகங்கை மாவட்டம் சார்பாக புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகர் மன்ற தலைவர் சோ. மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் சொ. ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் பா. பட்டுராஜன், அரசு அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியின் அனைத்து பிரிவு இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக