இந்தி திணிப்பை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

இந்தி திணிப்பை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக!


காட்பாடி ,பிப் 22-

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு எட்டாவது வார்டுக்கு உட்பட்ட குளக்கரை தெருவில் இன்று பொதுமக்கள் அவரவர் வீட்டு வாசலில் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு இந்தி திணைப்பை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்   இந்தியை திணிக்காதே தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்ற வாசகங்கள் எழுதி எதிர்ப்பு தெரிவித்தனர் பொதுமக்கள் கூறுகளில் பள்ளி மாணவர்கள் புத்தகப் பைகளை கிலோ கணக்கு சுமந்து செல்கின்றனர் தமிழ் வழி தாய்மொழி தமிழ் மற்றும் விருப்பமான பாடத்தை படித்து வருகின்ற நிலையில் கட்டாயம் ஹிந்தி என்ற மொழியை  திணிப்பை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

 இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் எட்டாவது வார்டு தெற்கு பகுதி செயலாளர் M.சுனில் குமார் துணை மேயர் தலைமையில் மற்றும் எட்டாவது வார்டு வட்ட செயலாளர் J. சசிகுமார் முன்னிலையில் எதிர்ப்பு தெரிவித்து  தமிழ் வாழ்க இந்திய பதாகைகள் வைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad