ஆத்தூரில் மகனின் கடன் பிரச்சனையால் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் ராஜகோபால் (72). முன்னாள் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற இவர் ஆத்தூரில் தன் வீட்டு முன் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இவரது மூத்த மகன் பிரகாஷ் சொந்த தொழில் செய்வதாக கூறி அதிகளவில் கடன் வாங்கியிருந்தாராம். கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு ராஜகோபாலிடம் வற்புறுத்தினார்களாம்.
இதனால் மனவேதனையடைந்த ராஜகோபால் நேற்று காலை 9 மணி அளவில் கடை மாடி குடோனில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இன்று காலையில் கூட சகஜமாக வந்து டீ அருந்தி சென்றதாக நண்பர்கள் கூறியுள்ளனர் அனைவரிடம் சகஜமாக பழக கூடிய தொழில் அதிபர் திடீரென இறந்த சம்பவம் வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது கடையில் குறைந்த விலையில் அனைத்து இருசக்கர வாகனங்கள் உதிர் பாகங்கள் விற்கப்பட்டு வந்ததால் ஆத்தூர் மட்டுமல்லாமல் குரும்பூர், ஆறுமுகநேரி, ஏரல் சுற்றுவட்டாரங்களில் ஏராளமாக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக