மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸின் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கிராம கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கந்தசாமி அவர்களின் தலைமையில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு பால் நல்லதுரை மற்றும் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் நகர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த நிர்வாகிகள், மற்றகிராம கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக