கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மினி மாரத்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து காலை 6-மணிக்கு தொடங்கியது.இப் போட்டியினை கன்னியாகுமரி மாவட்ட ஏ. டி .எஸ்.பி மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிம்ஸ் மருத்துவமனை சி.இ.ஓ கிரிபேஷ் துவக்கி வைத்தார். இப்போடியானது அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி வேப்பமூடு , செட்டிகுளம்,பார்வதிபுரம் மேம்பாலம் சென்று மீண்டும் அண்ணா ஸ்டேடியம் வந்தடைந்தது.இது 5- கிலோமீட்டர் 10- கிலோமீட்டர் என 2- பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது இதில் 1000 - க்கும் மேற்ப்பட்டார் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற முதல் 3 - நபர்களுக்கு 2 - லட்சம் ருபாய்கான காசோலை வழங்கப்பட்டது.மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வடசேரி போக்குவரத்து காவல்துறையினர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 200 - க்கும் மேற்பட்டோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.T.தமிழன் ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக