மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து

 

IMG_20250226_140448_115

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்.


மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன் ஆகியோருக்கு சொந்தமான பிஸ்கட் குடோன் உள்ளது.


இந்த குடோனில் பிஸ்கட் வகைகள், கேக் குக்ரே, சிறுவர்கள் சாப்பிடும் மிட்டாய் உள்ளிட்டவைகளை மொத்தமாக (சூப்பர் ஸ்டாகிஸ்ட்) மதுரை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு 11மணியளவில் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பினர். சிறிது நேரத்தில் உடனிலிருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது. குடோன் முழுவதும் தீ பரவியது. விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள், திடீர் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் என முப்பதுக்கு மேற்பட்டோர் விரைந்து வந்த தீயணைத்தனர். பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டு 4மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த தீ விபத்தில் இரண்டுகோடி ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட் கேக் குக்ரே,  உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. நள்ளிரவு நேரம் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


இந்த தீ விபத்து குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad