![]() |
உடுமலை ராகல்பாவி ஊராட்சியில் வித்தியாசகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட குழு முகாம் நடைபெற்றது.
உடுமலை வட்டம்
இராகல்பாவி ஊராட்சியில்
வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் முதுநிலை சமூகப்பணி துறையின் கிராமிய மேம்பாட்டு முகாமின் உடற்பயிற்சி மூலம் இனிதே துவங்கியது, அதனை தொடர்ந்து உடுமலை வட்டம் இராகல்பாவி ஊராட்சியில் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப்பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சின்ன பூலாங்கிணறு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பின் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் சமூக மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினர்களாக உடுமலை திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக