ஆற்காடு காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக புவியரசி ஜெகன் பதவியேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தென்பாலாற்றங்-கரையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் அதை சார்ந்த ஒன்பது திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக புவியரசி ஜெகன் அவர்களை அறங்காவல் குழு தலைவராக தேர்ந்தெடுத்து பதவியேற்பு விழா நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை அறங்காவல் குழு தலைவர். இலட்சுமணன் அறங்காவலர் குழு தலைவருக்கான நியமனச் சான்றிதழை வழங்கினார். மேலும் உறுப்பினர்களாக சுமார், தீனு அவர்களுக்கும் நியமன சான்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் வே.சங்கர், மற்றும் அறங்காவல் துறை அலுவர்கள் ஆற்காடு நகரமன்ற தலைவர். தேவிபென்ஸ் பாண்டியன், மகாத்மாகாந்தி அறக்கட்டளை துணைத்தலைவர். பென்ஸ்பாண்டியன், ஆற்காடு மேற்கு திமுக ஒன்றிய செயலாளர். நந்தகுமார், 6-வது வார்டு நகரமன்ற உறுப்பினர். இராஜலக்ஷ்மி துரை, நாட்டாமைதாரர்க பாண்டுரங்கள், மலர், சந்திளசியம்மன் ஆலய (நிவோதி) துரை, திமுக நகரத் துணைச் செயலாளர். சொக்கலிங்கம், நகரமன்ற உறுப்பினர் ஆனந்த் பழனி, மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக