அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வசதிகளை மேம்படுத்தித் தருவதாக அமைச்சர் உறுதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமாரை ஆதரித்து வீடு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் பிரசாரம் மேற்கொண்டனர். வீடு வீடாகச் சென்று ஓட்டுகளைச் சேகரித்த இடங்களில், ஆரத்த எடுத்து பொதுமக்கள் வரவேற்பு வழங்கினர்.
அப்பகுதி மக்கள் தெரிவித்த
கோரிக்கைகளைப் பதிவு
செய்துகொண்ட அமைச்சர் சு.
முத்துசாமி, தேர்தல் முடிந்தபின்,
அவற்றை நிறைவேற்றித் தருவதாக
உறுதியளித்தார். பின், அமைச்சர்
சு. முத்துசாமி பேசியதாவது:
கருங்கல்பாளையம் பகுதியில்
சாலை விரிவாக்கத்துடன்,
இப்பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி
குடியிருப்புகளுக்குத் தேவையான
அடிப்படை வசதிகளான குடிநீர்,
மின் இணைப்புடன் போதிய
மின்விளக்குகள், பொது கழிப்பிடங்கள்
போன்றவை ஏற்படுத்தித் தரப்படும்.
இப்பகுதியில் உள்ள பள்ளிகளில்
தேவையான அடிப்படை கட்டமைப்பு, கூடுதல் கட்டடங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சாலைகள் விரிவாக்கத்துடன், ரயில்வே நுழைவு பாலங்களுக்கு மாற்றாக கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம், கரூர் சாலையில் உள்ள நுழைவு பாலங்களுக்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்துத் தர முயற்சிகள் நடந்து வருகிறது. அவை விரைவுபடுத்தப்படும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் சந்தானம், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக