இன்று 20.02.2025 காவல்துறையின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி 20.02.2025 இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரை நேரில் அழைத்து அரசால் வழங்கப்பட்ட 1560 இலவச பஸ் பாஸ் அட்டையினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் காவலர்களுக்கு நேரில் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக