ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 8ம் தேதி) ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
பொது விநியோக திட்ட குறைதீர்க்கும்
நாள் முகாம், ஈரோடு மாவட்டத்தில்
உள்ள 9 வட்டங்களில் (ஈரோடு
வட்டம் தவிர) நாளை மறுநாள்
(சனிக்கிழமை) நடக்கிறது. அதன்படி,
பெருந்துறை வட்டத்தில் நல்லாம்பட்டி
ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி
வட்டத்தில் ஈஞ்சம்பள்ளி ரேஷன்
கடையிலும், கொடுமுடி வட்டத்தில்
நாகமநாயக்கன்பாளையம் ரேஷன்
கடையிலும், கோபிசெட்டிபாளையம்
வட்டத்தில் புதுக்கரைபுதூர்,
நஞ்சைகோபி ரேஷன் கடையிலும்
குறைதீர்க்கும் நாள் முகாம்
நடைபெறுகிறது.
மேலும், நம்பியூர் வட்டத்தில் குருமந்தூர் ரேஷன் கடையிலும், பவானி வட்டத்தில் சிங்கம்பேட்டை-1 படவல் கால்வாய் கிராமம் ரேஷன் கடையிலும், அந்தியூர் வட்டத்தில் பிரம்மதேசம் -2 ரேஷன் கடையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் பூசாரிபாளையம் ரேஷன் கடையிலும், தாளவாடி வட்டத்தில் கெத்தேசால் ரேஷன் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு வேண்டியும், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் குமார், பவானி தாலுக்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக