போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக பத்திர பதிவு காவல் கண்காணிப்பாளரிடம் மனு!
காட்பாடி ,பிப் 10 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பரணீஸ்வரர் பகுதியில் சிஎஸ்ஐ பேராலயத்திற்கு சொந்தமான இடங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர் இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் 30க்கும் மேற்பட்ட ஆயர்கள் நேரில் சென்று மனு வழங்கினர்.
போலி ஆவணங்கள் தயாரித்து சி.எஸ்.ஐ.வேலூர் பேராயத்தின் Industrial Institute காட்பாடி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் முறைகேடாக பத்திரப்பதிவு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் முப்பதுக்கும் மேற்பட்ட ஆயர்கள் Dr. DSC மேனன்,ஜோசப் பிரேம்நாத் ஆகியோர் தலைமையில் புகார் வேலூர் மாவட்டம் காட்பாடி பர்னீஸ்புரம் ஐ.டி.ஐ.வேலூர் பேராயம் சி.எஸ்.ஐ. கீழ் இயங்கி வருகிறது அதற்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்
முப்பதுக்கும் மேற்பட்ட ஆயர்கள் Dr. DSC மேனன், ஜோசப் பிரேம்நாத் ஆகியோர் தலைமையில் புகார் மனு அளித்தனர். இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் கல்மேல் குப்பம் மதுரா வில்வ நாதபுரம் பகுதியைச் சார்ந்த 'லதா என்பவருக்கு மதுரா கல்பத்தூர் கிராமம் ராஜ்குமார் என்பவர் செட்டில் மெண்ட் ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளதாகவும், குமார் என்பவர் பேபி என்பவருக்கு 11646/ 2024 ஆவண எண் மூலம் செட்டில்மெண்ட் வழங்கியுள்ளதாகவும் அதற்கு நத்தம் பட்டா எண் 1456 காட்பாடி வட்டாட்சியர் G.சரவணன் அ.பதிவேட்டில் 17.10. 2024 போலியாக தயார் செய்து காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி மகன் குமார், நாகப்பன் மகன் ராஜ்குமார் என்பவருக்கும் பட்டா வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், மகேந்திரன், பிரபாகரன் ஆகியோர் சாட்சியாகவும், பத்திர எழுத்தர் இளங்கோவன் கம்மார் தெரு, பேரனாம்பட்டு ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பத்திரப்பதிவு செய்து வேலூர் பேராய சொத்தினை அபகரித்துள்ள தாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக