கன்னியாகுமரி மாவட்டம் இலந்த விளையை ஊரை சேர்ந்த எஸ் .பி. விஜய் ஆனந்த் கைது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டம் இலந்த விளையை ஊரை சேர்ந்த எஸ் .பி. விஜய் ஆனந்த் கைது

IMG-20250220-WA0012

 தமிழ்நாட்டை கலக்கி வந்த பிரபல விபச்சார கும்பல் தா தா சுசீந்திரம் காவல் நிலைய ரவுடி பட்டியல் என் 11 /2023 கன்னியாகுமரி மாவட்டம் இலந்த  விளையை ஊரை சேர்ந்த எஸ் .பி. விஜய் ஆனந்த் கைது 


 கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இலந்தவிளை என்ற ஊரை சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரது மகன் விஜய் ஆனந்த் வயது 50 இவன்  வக்கீல் என கூறிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மசாஜ் சென்டர் விபச்சாரம் என கொடிகட்டி பறந்து வந்தான் காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தியும் நீதித்துறையை சேர்ந்தசிலர் பெயரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் விபச்சார விடுதிகள் மசாஜ் சென்டர்களில் மாமுல் வசூலித்து வந்தான் விபச்சார தொழில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று சவால் விட்டு வந்தான் தனக்கு மாமுல் தராமல் தமிழ்நாட்டில் எந்த விபச்சார விடுதியும் மசாஜ் சென்டர்ம் செயல்பட விடமாட்டேன் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற நேர்மையான காவல் அதிகாரியான திரு. ஸ்டாலின். ஐபிஎஸ் அவர்கள்  கவனத்திற்கு இந்த விஷயம் சென்றது உடனடியாக தனிப்படை அமைத்து அவனது விபச்சார சாம்ராஜ்யத்தை ஒழிக்க உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட தணிப்படை போலீசார் விஜய் ஆனந்தின் விபச்சார சாம்ராஜ்யத்தை ஒழித்ததோடு தலைமறைவாக இருந்த அவனை கைது செய்ய முயன்றுள்ளனர் தப்பித்து ஓடும்போது கீழே விழுந்து கை உடைந்து உள்ளது ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் எனக் கூறப்படுகிறது அவனது வீட்டை சோதனையிட்ட போது பெரிய அளவில் பணமும் யார் யாரு டன் தொடர்பில் இருந்தான் எந்தெந்த  அதிகாரிகள் இவனுடன் தொடர்பில் இருந்தனர் போன்ற விபரங்களும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad