விஜயாபதி பிரம்ம மகரிஷி விஸ்வாமித்திரர் திருக்கோவில் தைப்பூச திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

விஜயாபதி பிரம்ம மகரிஷி விஸ்வாமித்திரர் திருக்கோவில் தைப்பூச திருவிழா.

விஜயாபதி கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம மகரிஷி விஸ்வாமித்திரர் திருக்கோவில் தைப்பூச திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயாபதி கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம மகரிஷி விஸ்வாமித்திரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாகும். 

இந்த திருக்கோவிலில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பக்தகோடிகளும், வெளி வட்டார பக்தகோடிகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர். 

பின்னர் மதியம் பிரம்ம மகரிஷி விஸ்வாமித்திரர் திருக்கோவில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.  

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad