கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி களத்தில் இறங்கிய சினிமா டைரக்டர் பி.டி. செல்வக்குமார்
அஞ்சுகிராமம் கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொட்டாரம் ஜங்ஷனில் கன்னியாகுமரி நாகர்கோவில் வட்டக் கோட்டை அகஸ்தீஸ்வரம். பகுதிகளுக்கு செல்லும் ரோடுகள் இணையும் சந்திப்பு உள்ளது. மேலும் அரசு மேல்நிலைபள்ளி, போஸ்ட் ஆபீஸ், அனுமான் கோவில், அரசு ஆரம்ப ஆஸ்பத்திரியும் அமைந்துள்ளது. இப்பதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. மேலும் இப்பகுதியில் நாகர்கோவில், வட்டக் கோட்டை, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி செல்லும் பயணிகள் நிழல்குடை உள்ளது. பஸ் நின்று செல்லும்போது கடுமையாக டிராபிக் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்று காலை 9 மணியளவில் கடும் டிராபிக் நெருக்கடியில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது அச்சமயம் காரில் வந்த கலப்பை மக்கள். இயக்க நிறுவனரும், சினிமா டைரக்டருமான பி.டி.செல்வக்குமார் உடனடியாக காரில் இருந்து இறங்கி டிராபிக்கை சரிசெய்தார். கடும் வெயிலிலும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்த கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வக்குமாரை பொதுமக்கள் பாராட்டினர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக