குடியாத்தம் , பிப் 14-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி கங்காதர சுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்திட வேண்டும்.! ஜான் பாண்டியன் தமிழக அரசு வேண்டுகோள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் டாக்டர் ஜான் பாண்டியன் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப் பகுதியான பிச்சனூர்பேட்டை பகுதியில் உள்ள கங்காதரசுவாமி மடாலய நடு நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஆனால், அதற்கான இடவசதி பற்றாக்குறையாக இருப்பதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு சற்றுதொலைவில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது இந்த இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பள்ளி தரம் உயர்த்த அந்த இடம் போதுமானது.
மாணவர்களின் வாழ்வைதரம் உயர்த்தும் கல்வியை கருத்தில் கொண்டு, குடியாத்தம் - கங்காதரசுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை, தரம் உயர்த்து மாறு மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு மென வலியுறுத்துகிறேன். அல்லது இந்து சமய அறநிலைத்துறையே பள்ளியை துவங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது மேலும் இது குறித்து வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ் லாவண்யா தினேஷ் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் இது குறித்து மனு அளித்துள்ளார் அதன்படி மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி விசாரித்து வருகிறார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக