1. இராதாபுரம் தொகுதி திட்டமிட்டு வறட்சி பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது கல்குவாரி பூங்காவாக மாற்றி விவசாயத்தையும் விவசாயிகளையும் வெளியேற்றும் செயலை செய்து வரும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
2. அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் உரிமத்தை ரத்து செய்யவும். விவசாய விளை நிலங்களை கல்குவாரி போன்ற விவசாயத்தை அழித்தொழிக்கும் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க கூடாது எனவும் காற்றாலை நிறுவனங்கள் பயன்படுத்தும் வழித்தடங்களை விவசாய நிலங்களுக்கு போகும் பொது வழித்தடங்களாக அறிவிக்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
3. கடலில் கலக்கும் பழையாற்று நீரை பம்பிங் மூலம் கொண்டு வந்து இராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயின் அனைத்து பணிகளையும் விரைவில் நிறைவு செய்து அந்த திட்டத்தின் முழு பயனையும் பொதுமக்கள், விவசாயிகள் அடைய வெள்ள நீர் கால்வாய் பணிகளை அரசு விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. நீண்டநாள் கோரிக்கையான ஆலந்துறை ஆற்றுநீர்வழித்தடம் சீர் செய்யபட்டு அதிக அளவு தண்ணீர் குளங்களுக்கு வருவதற்கு வழிவகை செய்திட வேண்டி தீர்மானம் நிறைவேற்றபட்டது.
6. கொடுமுடி அணை பாசனம் பெறும் நீர் கடைமடைவரை அனைத்து குளங்களுக்கு சென்றடைய நீர் பகிர்வு அட்டவணையை நடைமுறைபடுத்த வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் குத்தகை விவசாய நிலங்களை பொது ஏலம் விடுவதை நிறுத்தி நிரந்தர குத்தகை தாரர்களாக்கவும் குத்தகை தீர்வையை மறுபரிசீலனை செய்திடவும். கோவில் நிலத்தில் குடியிருக்கும் அடிமனை பயனாளிகளுக்கு தீர்வையை குறைத்துமுறையாக வறைமுறைபடுத்த ஆவன செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றபட்டது.
8. இராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் ஊருணி அனைத்தையும் ஆழப்படுத்தியும் தண்ணீர் வரும் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு மதகுகள், மறுகால்கள் சரி செய்திடவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
9. இத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு போராட்டமாக நடத்த வரும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று இராதாபுரம் வறட்சி பகுதிக்கு தண்ணீர் பிச்சை கேட்கும் போராட்டம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
10. அனைத்து ஊர்களிலும் உள்ள விவசாயிகளை அந்தந்த ஊர்களில் ஒருங்கிணைப்பு செய்திடவும் மாதாமாதம் கூட்டங்கள் நடத்தி பகுதி சார்ந்த விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து பகுதியில் இருந்தும் வந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்
இராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்க தலைவர்.சி.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு சங்க செயலாளர் ராஜபவுல், மாறன், விஜயராஜன், சத்தியசீலன், C. மூர்த்தி, பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக