சாலையோர மரம் விபத்து ஏற்படுத்தும் முன் அகற்ற கோரிக்கை, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

சாலையோர மரம் விபத்து ஏற்படுத்தும் முன் அகற்ற கோரிக்கை,

 

IMG-20250206-WA0276

பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை அருகே இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  சேதமடைந்த சாலையோர மரம் விபத்து ஏற்படுத்தும்  முன் அகற்ற கோரிக்கை,


இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ராம்நகர் ஐஸ் பேக்டரி முன்பு இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மரம் ஒன்று கரையான் அரித்து பழுது ஏற்பட்டு முறிந்து விழுந்து கொண்டு  உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் வழியாக தான் இராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு  செல்லும் அனைத்து வாகனங்களும் செல்கின்றன  24 மணி நேரமும்  வாகனம் தொடர்ந்து சென்று கொண்டு இருப்பதால் .எந்த நேரத்திலும் மரம் சாய்ந்து விழும்  அபாயம் உள்ளது. எனவே மரம் விழுந்து   விபத்தை  ஏற்படுத்தும்  முன்  சேதமடைந்த  மரத்தை நெடுஞ்சாலை துறை நேரில் ஆய்வு செய்து மரத்தின் தன்மையை கண்டறிந்து  அகற்ற கோரி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad