குடியாத்தம் ,பிப் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் ராஜீவ் காந்தி தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரன் மகன் சத்தியராஜ் (வயது 35 ) தனியார் பள்ளி ஆசிரியர் இன்று விடியற்கால வெளியே செல்வதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்கிறார் அதே பகுதியை சேர்ந்த வேடி ( எ ) வேடியப்பன்
(வயது 40) என்பவர் சாலையில் மலம் கழித்து கொண்டு உள்ளார் சத்யராஜ் என்பவர் ஏன் சாலையில் அசுத்தம் செய்கிறார் என்று கேட்டுவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் எதிரில் நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டார் இதனால் ஆத்திரமடைந்த வேடியப்பன் என்பவர் வீட்டிற்குச் சென்று காலி பாட்டில் எடுத்து வந்து சத்யராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து வண்டியில் மீது ஊற்றி தீ வைத்து விட்டார். இதனால் வண்டி முழுவதும் எரிந்து விட்டது இது சம்பந்தமாக குடியாத்தம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக