மானாமதுரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2024-25 கீழ் ரூபாய் 36,28,000 மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர். பெரியகருப்பன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மானாமதுரை நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் திமுக நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, கட்டிட பொறியாளர், அரசு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக