செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருகான பயிலரங்கம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருகான பயிலரங்கம்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள் வருங்காலத்தில் தொழில் தொடங்க ஏதுவாக தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று பிப். 27 காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியினை திருநெல்வேலியை சார்ந்த மாரியப்பன் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் எந்தெந்த திட்டத்தில் எவ்வாறாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அரசின் சலுகைகள், அரசின் திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது, அதற்கான தகுதிகள் என்னென்ன என்பது போன்ற மாணவர்களின் பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் அறிவுறுத்தல் படி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad