உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கீழக்கரை வட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்,சிம்ரன்ஜீத் சிங் கலோன் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற பணிகளின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டறிந்ததுடன் மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறியுறுத்தினார் திருப்புல்லாணி நியாயவிலை கடைக்கு சென்று பதிவேடுகளை ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு குடும்ப அட்டைதாரருக்கு உரிய காலத்தில் பொருட்கள் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பார்வைவுற்றதுடன் அப்பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்ததுடன் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் திருப்புல்லாணி உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதன் விபரம் பணியாளர்களிடம் கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி நெற்களை கொள்முதல் செய்ய வேண்டும், என அறிவுறுத்தினார். பின்னர் திருப்புல்லாணி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கியுள்ள உணவின் தரம் குறித்து பார்வையிட்டதுடன் மாணவர்கள் தங்கும் அறையை பார்வையிட்டு தேவையான வசதிகள் வழங்கிட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பத்மநாதன், கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டை இளங்கோவன், ராஜேஸ்வரி. வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக