திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

IMG-20250224-WA0392

பிப்ரவரி.24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்றது.


 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.

IMG-20250224-WA0394


ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது.


இவ்வாண்டு புனித ரமலான் மாதம் இத்தேதியை முன்னிட்டு தொடங்க இருப்பதால் முன்கூட்டியே நிகழ்ச்சியை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


இதனையொட்டி திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


முன்னதாக காயத்ரி கார்டன் பகுதியில் இருந்து, வாகன ஊர்வலத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் எம்.முகமது நாசர், துணைத் தலைவர் மன்னை.செல்லசாமி இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோரை முழக்கங்களுடன் அழைத்துச் சென்றனர்.


மேடை அருகில் மஜக சமூக நீதி பாசறையின் மாநிலச் செயலாளர் நெல்லை ரமேஷ் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.


இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா அவர்கள் தலைமை வகித்தார்.


மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் திருப்பூர் ஜாகிர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.


அதன் பிறகு திருப்பூர் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான கோவை M.H.ஜாபர் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.


அவரைத் தொடர்ந்து இணைப் பொதுச்செயலாளர் கேப்டன் சையது முகமது ஃபாருக், துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் மஜகவின் பயணம் குறித்த எழுச்சியை பேசினார்கள்.


அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் மஜகவின் சேவைகளுக்கு பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.


அதன் பிறகு வழக்கறிஞர். உமர் கய்யாம் மற்றும் தென்னாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் அவர்கள் வாழ்த்தி பேசினார்.


பிறகு கூட்டத்தினர் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு வெளிப்படுத்தினார்.


அதன் பிறகு துணைத் தலைவர் மண்ணை. செல்வச்சாமி அவர்கள் பேசினார். 


அவரை தொடர்ந்து கட்சியின் அரசியல் பார்வை குறித்து பொதுச்செயலாளர் எம்.முகமது நாசர் அவர்கள் காத்திரமான உரையை வழங்கினார்.


நிறைவாக தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள்  பேசினார்.


கடந்த 9 ஆண்டு காலத்தில் மஜக ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள் குறித்தும், சட்டமன்ற பணிகள் குறித்தும், சமூக நல்லிணக்கத்திற்கு மஜக எடுத்து வரும் ஆக்கபூர்வமான முன் முயற்சிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிவாக தொண்டர்களின் ஆரவாரத்துக்கிடையே பேசினார்.


அப்போது நிறைவாக பேசியவர், ' கடந்த 10 ஆண்டுகளில் நமது கனவுகளை சாத்தியப்படுத்தினோம். அடுத்த பத்தாண்டுகளில் நமது களத்தை விரிவு படுத்துவோம்'  என பலத்த ஆரவாரத்திற்கிடையே கூறி உரையை நிறைவு செய்தார்.


பொதுக் கூட்டத்தை வாழ்த்தி கவுண்டர் சமூக அமைப்புகள், தேவர் சமூக அமைப்புகள், வெள்ளாளர் சமூக அமைப்புகள், தலித் சமூக அமைப்புகள் என பல்வேறு சகோதர சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து பதாகைகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர் மாவட்ட புகைப்பட கலைஞர் S.ஜாபர்சாதிக்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad