மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமாகிய மு க ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்களை நியமனம் செய்துள்ளார்.
மேலும் திருப்பூர் 14 வது வார்டு செயலாளர் மு. ரத்தினசாமி அவர்களை திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் நியமனம் செய்துள்ளார். இதையொட்டி இருவரும் சென்னை அறிவாலயத்தில் மாண்புமிகு முதல்வரும், திமுக தலைவருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை பெற்றனர்
.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக