உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரத்தில் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை திருட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் நசீர் அகமது இவர் கள்ளக்குறிச்சி வனத்துறை அலுவலகத்தில் வன காவலராக பணிபுரிந்து வருகின்றார் இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி என்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது அதில் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒன்பது போல் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதன் மதிப்பு 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அப்பகுதியில் உள்ள தடயங்களை சேகரித்து தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக