திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா மேட்டு பிராஞ்சேரி கிராமம் இன்று 09.02.2025 முத்து என்பவரின் வீட்டு அருகே மரத்தை சுத்தி வைக்கப்பட்டிருந்த வலையில் சாரைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது உடனடியாக அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார் உடனடியாக கங்கைகொண்டான் தீயணைப்பு துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வலையில் சிக்கியிருந்த சாரைப்பாம்பை போராடி உயிருடன் மீட்டனர்
இந்த நிகழ்வில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கமல குமார் ஹரிஹர சங்கரசுதன் முத்து ராஜு பார்த்தசாரதி சுப்பையா பாண்டி அவர்களுடன் இணைந்து ஆப்த மித்ர பேரிட மீட்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் தங்கராஜ் இணைந்து பாம்பு மீட்பதற்கு உதவி செய்தார்.
இதனை அடுத்து அந்த இந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நாட்டாமை பெருமாள் கணேசன் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்
சம்பவ இடத்திலிருந்து திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக